சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் என்பது 1980 இன் 47 இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்ட விதிகளின் கீழ் ஒரு ஒழுங்குமுறை சட்ட கருவியாகும். NFA இன் பிரிவு 23A, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் தவிர, எந்தவொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை தவிர்ந்த எந்தவொரு செயற்பாடுகளையும் செயற்படுத்தல்கூடாது என்று கூறுகிறது. அதாவது கழிவுகளை வெளியேற்றுவதற்கு, கழிவுகளை சேமித்து வைத்தல், புகை, வாயுக்கள், புகை, நீராவி அல்லது அதிகப்படியான சத்தம் / அதிர்வுகளை சுற்றுச்சூழலில் வெளியிடுவது போன்ற செயற்பாடுகளை செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அவசியமாகும்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையானது 1980 ஆம் ஆண்டில் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம் 28 பிரிவுக்கமைவாக 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி மத்திய சூழல் தவிசாளரினால் குறித்த சட்டத்தின் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆந் திகதிய 1159/ 22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையில் பகுதி I இல் பிரசுரிக்கப்பட்ட அதே கட்டணங்களும் அதே நிபந்தனைகளுக்கு அமைவாக 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் கீழ் காட்டப்படும் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட தத்துவங்களையும், கடமைகளையும் பணிகளையும் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சாவகச்சேரி பிரதே சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவு பத்திரம் பெற்று கொளவதற்கு பின்வரும் நடைமுறைகளை பினபற்ற வேண்டும்.
ஒன்றுக்காக ரூபா 4500.00 மற்றும் வரிகளும் அறவிடப்படும். சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவு பத்திரம் ஒவ்வொரு தடவையும் புதுப்பிக்கும் (மூன்று வருடத்துக்கு ஒரு தடவை) போது சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுக் கட்டணமாக ரூபா 4500.00 மற்றும் உரிய வரிகளும் அறவிடப்படும்.
பரிசோதனைக் கட்டணம் (ஆகக்கூடிய கட்டணம்)
1.ரூபா 250,000.00 அல்லது அதற்கு குறைவு - ரூபா 3,000.00
2. ரூபா 250,001.00- ரூபா 500,000.00 வரை - ரூபா 3,750.00
3. ரூபா 500,001.00 - ரூபா 1,000,000.00 வரை - ரூபா 5,000.00
4. ரூபா 1,000,000.00 மேல் - ரூபா 10,000.00
பிரதேச சபைச் சட்டத்தின் 149இ 150இ 152 (1) இல் பிரிவின் கீழ் விதித்து அறவிடப்படும் உரிமக் கட்டணங்களை எவ்விதத்திலும் பாதிக்காது. அட்டவணை
1. எல்லா வாகன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
2. பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்களைத் தொழிலுக்கமர்தியுள்ள மெழுகுவர்த்தி உற்பத்தி
3. பத்துக்கும் மேற்பட்டவர்களும் 25 இற்கும் குறைவானவர்களுமான வேலையாட்களைத் தொழிலுக்கமர்த்தியுள்ள தேங்காய்எண்ணெய் பிரித்தெடுக்கும் கைத்தொழில்கள்
4. பத்துக்கும் கூடுதலானவர்களும் 25 இற்குக் குறைவானவர்களுமான வேலையாட்களைத் தொழிலுக்கமர்த்தியுள்ள மதுசாரமற்றபான வகைகள்
5. உலர்பதனீட்டு முறைத் தொழிற்பாடுகளையுடைய அரிசி ஆலை
6. ஒரு மாதத்திற்கு 1000 கிலோ கிராமிலும் குறைவான உற்பத்தித்திறன் கொண்ட அரைக்கும் ஆலைகள்
7. புகையிலைக் களஞ்சியங்கள்
8. தொகுதியொன்றுக்கு 500 கிலோகிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கந்தக் தூப மூட்டும் கொள்ளவுடைய கறுவா தூபமூட்டும்கைத்தொழில்
9. உணவிற்குப் பயன்படுத்தப்படும் உப்பு சிப்பஞ் செய்தல், பதனிடுதல் கைத்தொழில்கள்
10. தேயிலைத் தொழிற்சாலைகள்
11. கொங்கீரீட் முன்வார்ப்புகள் கைத்தொழில்கள்
12. பொறி முறைப்படுத்தப்பட்ட சீமெந்துக் குற்றி தயாரிக்கும் கைத்தொழில்கள்
13. நாளொன்றுக்கு 20 மெற்றிக் தொன்னுக்கு குறைவான உற்பத்தித் திறன் கொண்ட சுண்ணாம்பு சூளைகள்
14. இருபத்தைந்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள மட்பாண்ட கைத்தொழில்கள்
15. எல்லா விதமான சுண்ணாம்புச் சிப்பி நொறுக்கும் கைத்தொழில்கள்
16. கூரை ஓடு மற்றும் செங்கல் சூளைகள்
17. வெடிமருந்துகளைப் பயன்படுத்தும் கம்மியர் சுரங்கத்தொழில், நடவடிக்கைகளுடனான ஒற்றைத்துறை தகர்ப்புகள் 1
19. ஐந்துக்குக் கூடுதலான 23 இற்கு குறைவான வேலையாட்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ள பலநோக்கு தச்சுப்பொறிகளைப்பயன்படுத்தும் தச்சு வேலைக்தளங்கள் அல்லது மரத்தை மெருகூட்டும் கைத்தொழில்கள் அல்லது மர வேலைத்தளங்கள்
21. வாகனங்களைப் பழுது பார்க்கும் செயற்பாடுகள் அல்லது பராமரித்தல் செயற்பாடுகளையுடைய கராஜ்கள்
22. குளிரூட்டி மற்றும் வளிச்சீராக்கி உபகரணங்களும் முறைகளும் பழுது பார்த்தல், பேணல் நிறுவுதல், இணைத்துப் பொருத்துதல். உற்பத்தி செய்தல் ஆகிய வேலைகளை மேற்கொள்ளும் வேலைத்தளங்களும் பராமரிப்பு வசதிகளும் (கராஜ்கள் உட்பட) நடமாடும் வளிச் சீராக்கிகள், போக்குவரத்துக் குளிரேற்றிகள் மற்றும் குளிரேற்றல் மீட்பு மற்றும் மீள்பயன்பாடு போன்ற சார்புடைய செயற்பாடுகள் உட்பட
23. வாகனப் பராமரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் தவிர்ந்த கொள்கலன் சாலைகள்.
24. பத்துக்கு மேற்பட்ட வேலையாட்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள எல்லா விதமான மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்கள்பழுதுபார்த்தல்
25. ஈயம் உருக்குதல் புற நீக்கலாக அச்சுக் கூடங்களும் எழுத்துப் பொறிகளும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
1.பூரணப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிம விண்ணப்பப் படிவம்
2.தொழில் அல்லது வணிகத்தின் இருப்பிடத்தைக் குறிக்கும் வீதியின் படம் 3.நடப்பாண்டுக்குரிய வியாபார அனுமதிப்பத்திரம் (புதிதாக சேர்க்கப்பட்டது)
4. வியாபார பதிவு சான்றிதழ்.
5.கட்டிடம் / தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மற்றும் இணக்கச் சான்றிதழ் 6.குறித்த காணிக்கான உறுதிப்பிரதி (புதிதாக சேர்க்கப்பட்டது)
7.நில அளவைப்படம்
8.வாடகை/ குத்தகை ஒப்பந்த பிரதி தேவையேற்படின். (புதிதாக சேர்க்கப்பட்டது)
9.மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவு.