குடிநீர் சேவை
1978ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 114,118 இன் கீழ் உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும்பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் சிபார்சுடன் வரட்சி காலப்பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி பிரதேசசபையில் குடிநீரினை பெற்றுக் கொள்வதற்கு கச்சாய் உப அலுவகத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று கட்டணத்தை செலுத்தி சேவையினை பெற்று கொள்ளலாம்.
கச்சாய் உப அலுவலகம்
📞0212271801
பொறுப்பதிகாரி
திருமதி.ம.ஜெயந்தினி
குடிநீர் கட்டணம்
1L - 1ரூபாய்
3500L - 2000.00
6000L - 3000.00
குடிநீர் தாங்கி
1000L ஒரு தடவை 500.00
குடிநீர் தன்ன்கிக்கு போக்கு வரத்து கட்டணம் மேலதிகமாக அறவிடப்படும்.
முதல் 5KM இற்கு 500.00 அடுத்து வரும் ஒவ்வொரு KM இற்கும் 500.00 அறவிடப்படும்
விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல்.
முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல்.