இலங்கை சனநாயக  சோசலிச குடியரசின் 15ம் ஆண்டு ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சாவகச்சேரி பிரதேச சபையானது பிரதேச மக்களுக்கு கருவறையில் இருந்து கல்லறை வரை சேவைகளை வழங்கி வருகின்றது.

2007.06.12  தொடக்கம்  2016.01.06 வரையான காலப்பகுதியில் திருமதி. தர்சினி அவார்கள் செயலாளராக கடமையாற்றினார்.


2016.01.06 தொடக்கம்  2016.05.11   வரையான காலப்பகுதியில் திரு.அருணாகிரி வினோராஜ் அவர்கள்  செயலாளராக கடமையாற்றினார்.

2016.01.06 தொடக்கம்  2019.03.25  வரையான காலப்பகுதியில் திருமதி முகுந்தினி கோடீஸ்வரன்   அவர்கள்  செயலாளராக கடமையாற்றினார்.

2019.03.25 தொடக்கம்  2022.09.09  வரையான காலப்பகுதியில் திருமதி . கிரிஜா வாசுதேவன் அவர்கள்  செயலாளராக கடமையாற்றினார்.

2022.09.09 தொடக்கம்    திரு.கதிர்காமநாதன் சந்திரகுமார் அவர்கள்  செயலாளராக கடமையாற்றி வருகின்றார். இவரது காலபகுதியல் சபைக்குரியா முகநூல் புத்தகம் உருவாக்கப்பட்டது. அத்துடன் உள்ளூர் உதவி திட்ட நிதியுதவியுடன் மிருசுவில் உப அலுவலகம்  மற்றும் அதனுடன் இணைந்த  இலவச சித்த மருந்தகம் தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளர் திரு. பிரணவநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

சரசாலை பொது மக்களின் நன்மை கருதி சரசாலை இலவச சித்த மருந்தகம் 19.06.2023ம் திகதி ஆரம்பிக்கப்படு மக்கள் சேவையை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நன்மை கருதி QR முறையிலான கொடுப்பனவு முறைகள் மற்றும் இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி  பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. நீண்டகாலமாக இயங்காது காணப்பட்ட ஐங்கரன் முன்பள்ளி புனரமைக்கப்பட்டு மீண்டும்  26.01.2024 ம் திகதி கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.


 2025 ம் ஆண்டு ள்ளூர் உதவி திட்ட நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட எமது சபையின் கொடிகாமம்  பொது சந்தையானது திறந்து வைக்கப்பட்டது.