வரலாற்று பின்னணி
உள்ளூராட்சி அமைப்புக்களின் அவசியம் என்னுமிடத்து வரலாற்று ஆரம்பத்திலிருந்து நின்று நிலைத்த நிறுவனங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முக்கியமான இடமுண்டு. மக்களின் தேவைகளை நிறைவேற்றி வந்த வரலாறு தான் இந்நிறுவனங்களின் நெடுவாழ்வுக்கான அடி அத்திவாரமாக அமைகின்றது. பல்வேறு கால கட்டங்களில் மத்திய அரசாங்கம் வலுவாக விரிவாக்கப்பட்ட போதும் உள்ளூராட்சி அமைப்புக்களின் தேவையை உதாசீனம் செய்யமுடியாத அளவிற்கு அவற்றின் மீதான தங்கியிருப்பு அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாழுமிடத்திற்கு அண்மையில் அடிப்படைத் தேவைகளைப் பெறக்கூடிய வாய்ப்பான நிறுவனங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிரஜைகளும் “கருவறையிலிருந்து கல்லறை வரை” பிரதேசசபைகளினால் வழங்கப்படும் சேவைகளால் பயனடைந்துள்ளனர். சுகாதமாரம், ஆரம்பக்கல்வி, வீதி அபிவிருத்தி, மயான சேவைகள் என்பன அடிப்படைச்சேவைகளாகும. மேற்கூறப்பட்ட சேவைகள் இன்றி மக்கள் வாழமுடியாது. எனவே உள்ளூராட்சி அமைப்புக்களின் சேவைகள் அவசியம் என்பதால் உள்ளராட்சி அமைப்புக்களும் அவசியமாகின்றது.
சாவகச்சேரி பிரதேசசபையின் வரலாற்றில் கிராம சங்கங்களாக இருந்து சில வருட காலத்தில் இவை கிராம சபைகள் என பெயர் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்சபைகளின் செயற்பாடுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இச்சபைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக மேற்கொள்வதற்கு கிராமசபைக் கட்டளைச்சட்டமும் அதன் கீழ் ஆக்கப்பட்ட உபவிதிகளும் வழிவகுத்தன. உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்தில் முன்னற்றகரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்க அரசாங்கம் 1980ம் ஆண்டின் 35ம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் மூலம் கிராமசபை, பட்டின சபைகளாக இயங்கிய உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் பெயரில் 1981 யூலை மாதம் முதல் செயற்படுத்த ஆரம்பித்தது.
மாவட்ட அபிவிருத்திச்சபை நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி வெற்றியளிக்காததால் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்து இதன் மூலம் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் அடங்கும் (1984 யூலை மாதத்திற்கு முன்னைய) கிராம சபைகள், பட்டின சபைகள் இணைக்கப்பட்டு பிரதேசசபைகள் என 01.01.19988ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியில் பிரதேசசபைக்கான தேர்தல் நடாத்தப்படாமையினால் விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடாத்தப்பட்டது.
1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் இயங்கும் 13 பிரதேச சபைகளுள் 49 கிராம அலுவலர் பிரிவுகளையும், ஆறு உப அலுவலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய பரந்த பரப்பளவினைக் கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எ