உள்ளூராட்சி மன்றங்களினால் வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்திற்குள் அமைந்துள்ள வீடுகளிலுள்ள கழிவுகள் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகளை சேகரித்து அகற்றுதல் அந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. வரிப்பண வலயத்திற்குள் அமைந்துள்ள வசிப்பிடமற்ற சொத்துக்களிலிருந்து மற்றும் வரிப்பண வலயத்திற்குப் புறம்பாக ஏதேனுமொரு இடத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களிற்கு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் சேருகின்ற கழிவுகளை உரிய விதத்தில் அகற்றும் செயற்பாடானது அந்த இடத்தில் வசிப்பவர்களினால் மேற்கொள்ளப்படல் வேண்டும். எனினும் அத்தகைய நபர்களுக்கு தமது வளாகத்தில் உருவாகின்ற கழிவுகளை தம்மாலேயே முகாமைத்துவம் செய்து கொள்ள முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில் மற்றும் அந்த கழிவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக அகற்ற வேண்டுமெனின், அதற்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையின் மீது உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போதுமான இயலுமை காணப்பட்டால், கட்டணங்களை அறவிட்டு அவ்விடங்களில் உருவாகும் கழிவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் அகற்றுதல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 93 பிரகாரம் பொருத்தமானதாகும்.
சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் வீட்டுக்குப்பைகள், நிறுவன குப்பைகள் மற்றும் வர்த்தக நிலைய கழிவுகளை அகற்ற வேண்டுமாயின் பின்வரும் கட்டணங்களை செலுத்தி சேவையினை பெற்று கொள்ளலாம்.
1. தரம் பிரித்த குப்பைக் கழிவுகள் - ரூபா 2,000.00 (உழவு இயந்திரம் மூலம் ஒவ்வொரு லோட்டுக்கும்)
2. கோழிக் கழிவுகள் - ரூபா 2,000.00 (உழவு இயந்திரம் மூலம் ஒவ்வொரு லோட்டுக்கும்)
3. கல், மண் கட்டட இடிபாடுகள் - ரூபா 2,500.00 (உழவு இயந்திரம் மூலம் ஒவ்வொரு லோட்)
4. உடைந்த கண்ணாடிகள், ஓடுகள் - ரூபா 100.00 (ஒவ்வொரு உரப்பைக்கும்)
5. கடைக்கழிவுகள் - ரூபா 100.00 (ஒவ்வொரு உரப்பைக்கும்)
குறிப்பு:- மேற்படி கட்டணமானது கொடிகாமம் நகரப்பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் (5KM) தூரத்திற்கு மட்டும் பொருந்தும்.அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரூபா 250.00 போக்குவரத்து கட்டணமாக அறவிடப்படும்.
அரச பாடசாலைகளில் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கான விசேட சேவைக் கட்டணம் - ரூபா 1,000.00 (ஒவ்வொரு தடவைக்குமான கட்டணம் கிலோமீட்டரை கருத்திற் கொள்ளப்படமாட்டாது.) தரம் பிரிக்கப்பட்ட சாதாரண குப்பை மற்றும் கழிவுகளை தொடர்ச்சியாக அகற்றுவதற்கான கட்டணம். •
பல்பொருள் வாணிபம், வியாபார நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவகங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் - ரூபா 2,000.00 (மாதாந்தக் கட்டணம்)
• தங்குமிடம், ஹோட்டல்கள், திருமண மண்டபம் - ரூபா 5,000.00 (மாதாந்தக் கட்டணம