திரவக் கழிவகற்றல்
உள்ளூராட்சி மன்றங்கள் தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாகும். அதிகார எல்லையினுள் கழிவு நீர் அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியையும் மேம்படுத்தி உறுதிப்படுத்துகின்றது. 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 93 இன் கீழ் பொதுமக்களாகிய நீங்கள் எமது சபையிலிருந்து கழிவுறிஞ்சி சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.
தென்மராட்சி பிரதேசசெயலக' எல்லைக்கு வெளியே
முதலாவது லோட் கழிவகற்றல் கட்டணம் ரூபா 6500.00.
- அடுத்து வரும் ஒவ்வொரு லோட் ரூபா 5000.00 ( 14 நாட்களினுள் மட்டும்)
கழிவுநீர் ஒரு லோட் ரூபா 2500.
இவற்றுடன் இவற்றுக்கு மேலதிகமாக
சாரதிக்கான செலவு ரூபா 750.00 சபைக்கு செலுத்த வேண்டும்.
தொழிலாளிக்கான செலவு ரூபா 250.00 சபைக்கு செலுத்த வேண்டும்.
தென்மராட்சி பிரதேசசெயலக' எல்லைக்கு வெளியே
சபை எல்லைக்கு வெளியே கழிவகற்றல் கட்டணத்துடன் மேலதிகமாக போக்குவரத்து கட்டணமாக மேலதிக ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் (1KM) ரூபா 200.00 அறவிடப்படும்