கௌரவ ஆளுநர் அவர்கள் சாவகச்சேரி பிரதேசசபை பொதுமக்கள் தேவைகளை கண்டறிவதற்கான சந்திப்பு

 
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை கண்டறிவதற்கான பொதுமக்கள் சந்திப்பு சாவகச்சேரி பிரதேசசபையின் கீழ் நேற்றைய தினம் (27.02.2024) பி.ப 4.00 மணியளவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் தலைமையில் சரசாலை வடக்கில் நடைபெற்றது.  குறித்த நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் திரு. செ.பிரணவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன், சபை செயலாளர் திரு.க.சந்திரகுமார், தென்மராட்சி பிரதேச செயலக பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், சனசமூக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள்,  சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக முன்பள்ளி இணைப்பாளரான திருமதி. இராஜலட்சுமி, பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும்   கலந்து கொண்டிருந்தனர்.
பொது மக்கள் தங்களின் குறைபாடுகள் மற்றும்  அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி கௌரவ ஆளுநர் அவர்களிடம் கோரிக்கைகள்  கூறியிருந்தார்கள்.  பொது மக்களின் கோரிக்கைக்கள்  தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு அறிவித்து செயற்படுத்துவதாக ஆளுநர் அவர்கள் பொது மக்களுக்கு தெரிவித்திருந்தார். குறித்த சந்திப்பானது பி.ப 6.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாவகச்சேரி பிரதேசசபை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
 

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று சாவகச்சேரி பிரதேச சபையின்  செயலளார் தலைமையில் தலைமை அலுவலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடிகாமம் இலங்கை வங்கி  முகாமையாளர்  மற்றும்  அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.      

சேவைநலன் பாராட்டு விழா திரு. ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி

சாவகச்சேரி பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற திரு.ஆறுமுகம் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் இன்று (2024.02.16)  நலன்புரிச் சங்க அங்கத்தவர்களால் சிறப்புற கௌரவிக்கப்பட்டார்.  எமது  சபையில் நியமனம் பெற்று பல பதவிகள் வகித்து தனது வாழ்க்கை காலத்தை பிரதேச சபைக்கு என அர்ப்பணித்த சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் சேவை நிறைவில்  வரணி பொது நூலகத்தில் நூலக உதவியாளராக சேவை ஆற்றினார்.இவர் ஓய்வு பெற்றுச் சென்றாலும் பிரதேச சபையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இவ் அலுவலரின் ஓய்வு காலம் சிறக்கவும் நலத்துடன் வாழ்வும் வாழ்த்துகின்றது பிரதேச சபை..

வாழிய நீடூழி...
 

முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவு செயப்பட்ட சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச சபையின் புத்தூர்சந்தி முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவு செயப்பட்ட சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இன்று 14.02.2024ம் திகதியன்று எமது சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சபையின் செயலாளர் தலைமையில் Assistant Superintendent of Police, Kodikamam Police Station, கொடிகாமம ் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் பங்குபற்றினர்.  

மக்கள் பங்கேற்புடனான தூய்மைப்படுத்தம் பணி

மக்கள் பங்கேற்புடனான தூய்மைப்படுத்தம் பணி 06.02.2024ம் திகதியன்று கச்சாய் துறைமுகத்தில் இருந்து எறியால்பிட்டி மயானம் வரையான பகுதி வரை மேற்கொள்ளப்பட்டது.
சாவகச்சேரி பிரதேசசபையுடன் இணைந்து கச்சாய் கலைமகள் சனசமூக நிலையமும் கச்சாய் கடற்தொழிலாளர் சங்கமும் இணைந்து முதற்கட்டமாக கச்சாய் துறைமுகத்தில் இருந்து எறியால்பிட்டி மயானம் வரையான பகுதியில் பொதுமக்களால் கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள், பீங்கான்கள் என்பன தரம் பிரிக்கப்பட்டு பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டது.

ஐங்கரன் முன்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று (25.01.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி பிரதேசசபையின் கீழ் அல்லாரை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த ஐங்கரன் முன்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று (25.01.2024) தைப்பூச நல்நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நவீன முறையிலான கற்பித்தல் நுட்பங்களுடன் மிகச்சிறந்த கிராமிய இயற்கை சூழலில் ஆரம்பக்கல்வி ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி களின் இணைப்பாளர். திருமதி. ரா. மயில்வாகனசிங்கம், போக்கட்டி அ. த. க பாடசாலை அதிபர் திரு. தி. அபராஜிதன், அல்லாரை அ. த. க பாடசாலை உப அதிபர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை அலுவலர்கள் பொதுமக்கள் மழலைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமய நிகழ்வின் பின்னர் விருந்தினர்களால் கட்டிடம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வரவேற்பு நடனம் நடைபெற்றதுடன் அனைவரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இதன்பின்னர் ஏடு தொடக்கல் நிகழ்வும் இனிதே நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மழைலைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.