சாவகச்சேரி பிரதேசசபையின் கீழ் அல்லாரை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த ஐங்கரன் முன்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று (25.01.2024) தைப்பூச நல்நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நவீன முறையிலான கற்பித்தல் நுட்பங்களுடன் மிகச்சிறந்த கிராமிய இயற்கை சூழலில் ஆரம்பக்கல்வி ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி களின் இணைப்பாளர். திருமதி. ரா. மயில்வாகனசிங்கம், போக்கட்டி அ. த. க பாடசாலை அதிபர் திரு. தி. அபராஜிதன், அல்லாரை அ. த. க பாடசாலை உப அதிபர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை அலுவலர்கள் பொதுமக்கள் மழலைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமய நிகழ்வின் பின்னர் விருந்தினர்களால் கட்டிடம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வரவேற்பு நடனம் நடைபெற்றதுடன் அனைவரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இதன்பின்னர் ஏடு தொடக்கல் நிகழ்வும் இனிதே நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மழைலைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.









