சாவகச்சேரி பிரதேசசபையின் 2023 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தின நிகழ்வு 2024.03.28 மாலை 2.00 மணிக்கு நட்சத்திர மஹால் திருமண மண்டபத்தில் சாவகச்சேரி பிரதச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.கி .கமலராஜன், வலயக்கல்வி பணிப்பாளர் தென்மராட்சி அவர்ககளும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் சி.சுதோகுமார், சுகாதார வைத்திய அதிகாரி சாவகச்சேரி மற்றும் திரு.ப.பார்த்தீபன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வட மாகாணம் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆ.தங்கவேலு, அதிபர் – வரணி மத்திய கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது உள்ளூராட்சி தினத்தை முன்னிட்டுநடைபெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பங்கு வெற்றி ஈட்டிய சனசமூக நிலையங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் வளவாளராக செயற்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வரியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டது.