

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலக எல்லைக்குட்பட்ட கைதடி சந்தியில் LDSP திட்டத்தின் கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட கடைத்தொகுதி திறப்பு விழா வைபவம் சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் இன்றைய தினம் 28.06.2024 ம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
திரு.செ.பிரணவநாதன், செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாணம் மற்றும் திருமதி தேவநந்தினி பாபு , உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாணம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் .மேலும் இக்கடை தொகுதியை பொறுப்பேற்று கட் டட வேலைகளை பூர்த்தி செய்த ஒப்பந்தக்காரர்களான Tecora Construction நிறுவனத்தினர் , சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி, கடை தொகுதியை பொறுப்பெடுத்தத வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்கள் கடைதொகுதியை திறந்து வைத்ததர். சாவகச்சேரி பிரதேச சபையின் வறிய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கடைத்தொகுதியை பெற்றுக்கொண்ட வர்த்தகர்களுக்கு கடைத்தொகுதிக்கான திறப்பு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.