
எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வானது 19.07.2024 ம் திகதியன்று காலை 9.30 மணிக்கு முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றதுடன் எமது சபையின் செயலாளர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு ஐங்கரன் சனசமூக நிலைய தலைவர், கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர்கள், அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்