சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 05.11.2024 ம் திகதியன்று மட்டுவில் கமலாசினி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக Timko International Holdings Pvt Ltd நிறுவனத்தின் Chief Executive Officer வல்லிபுரம் தங்கராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பச்சிலை பள்ளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.தர்சினி தயானந்தன்,
எமது சபையின் ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர் திரு.வேலுப்பிள்ளை சிவராஜாலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கோவிலாக்கண்டி மகா லக்சுமி வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் திரு.கந்தையா தேவநேசன், மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தின் அதிபர் திரு.கிருஷ்ணசாமி சந்திரகுமார் மற்றும் மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் செல்வி நாகராஜா தர்மினி அவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் எமது பொது நூலகத்தின் பத்திரிக்கை வாசகர்கள் மற்றும் ஓய்வு நிலை நூலகர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
