சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024 ம் திகதியன்று கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.
எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற வைத்தியர் திருமதி. குகதாசன் சுமதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபர் திரு.சி .பாலச்சந்திரன், கச்சாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.ஐ.தேவராயன் மற்றும் சாவகச்சேரி நகராட்சி மன்ற உத்தியோகத்தர் திருமதி. ஜெயந்தினி மகிந்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆர்.எச்.சி.ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.