LDSP செயற்றிட்ட நிறைவு விழா-(2019-2024)


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகவங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட LDSP (Local Government Support Project) செயற்றிட்டத்தின் நிறைவு விழா 27.12.2024 ம் திகதியன்று வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் LDSP திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைகளை’ உரிய காலத்தில் பூர்த்திசெய்த உள்ளூராட்சி சபைகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் எமது சபையும் இச்செயற்றிட்டத்தில் சிறப்பாக செயற்பட்டமைக்காக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இக்கௌரவத்தினை பெறுவதற்கு எமது சபை சார்பாக ஒத்துழைப்புக்களை வழங்கி இரவுபகல் பாராது முழு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எமது சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எமது சபை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *