சாவகச்சேரி பிரதேசசபையும் கொடிகாமம் கொமர்சல் வங்கியும் இணைந்து நடாத்திய மகளிர்தின நிகழ்வு – 09.04.2025

சாவகச்சேரி பிரதேசசபையும் கொடிகாமம் கொமர்சல் வங்கியும் இணைந்து நடாத்திய 2025ம் ஆண்டிற்கான மகளிர் தினம் இன்றைய தினம் 09.04.2025 ம் திகதியன்று எமது சபையின் செயலாளர் திரு.க.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருமதி.இவ்வோன் லெரிவ் லியன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்- தென்மராட்சி கல்வி வலயம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு .அருளம்பலம் ஜெயபாலன், பிராந்திய முகாமையாளர் - கொமர்சல் வங்கி வட பிராந்தியம் மற்றும் திருமதி மயில்வாகனசிங்கம் ராஜலட்சுமி , செயற்பாடு மகிழ்வோம் இணைப்பாளரும் முன்பள்ளி மேற்பசர்வையாளரும் - தென்மராட்சி கல்வி வலயம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.தட்சணாமூர்த்தி பிரஜீப், முகாமையாளர்- கொமர்சல் வங்கி கொடிகாமம் அவர்களும் Dr.சத்துருக்கன் ஜெயதர்சினி , Dr.கனேசமணி சங்கீதா, ஆயுர்வேத மருத்துவ் உத்த்கியோகத்தர்கள் சாவகச்சேரி பிரதேசசபை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய தினம் இந்நிகழ்வில் பெண்களை உக்குவிக்கும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கும், கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் விறு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் தேசிய ரீதியில் செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.