வள வங்கி திறப்பு விழா 03.04.2025

எமது அலுவலகத்திற்கு PHINLA செயற்றிட்டத்தின் கீழ் தரம்பிரிக்க்பப்பட்ட கழிவுகளை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட வளவங்கியினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வு இன்றைய தினம் 03.04.2025 ம் திகதியன்று காலை 9.00 மணிக்கு எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி டென்சியா, பிரதி பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாண உதவி பிரதம செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.நிமால் பிறேம்திலக்க, தொழில்நுட்ப நிபுணர், PHINLA அவர்ளும் Mr.பிரகாஷ் , திட்ட முகாமையாளர், PHINLA , சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் கொடிகாமம் அவர்களும் கலந்து கொண்டதுடன் வளவங்கியின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.

அத்துடன் PHINLA project Manager இனால் எமது சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வள வங்கியினை எதிர்காலத்தில் வினைத்திறன்மிக்கதாக செயற்படுத்துவதற்கான விழிப்புணர்வுகள் , ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது