கௌரவ ஆளுநர் அவர்கள் சாவகச்சேரி பிரதேசசபை பொதுமக்கள் தேவைகளை கண்டறிவதற்கான சந்திப்பு

 

உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை கண்டறிவதற்கான பொதுமக்கள் சந்திப்பு சாவகச்சேரி பிரதேசசபையின் கீழ் நேற்றைய தினம் (27.02.2024) பி.ப 4.00 மணியளவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் தலைமையில் சரசாலை வடக்கில் நடைபெற்றது.  குறித்த நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் திரு. செ.பிரணவநாதன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. பொ. ஸ்ரீவர்ணன், சபை செயலாளர் திரு.க.சந்திரகுமார், தென்மராட்சி பிரதேச செயலக பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், சனசமூக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள்,  சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக முன்பள்ளி இணைப்பாளரான திருமதி. இராஜலட்சுமி, பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும்   கலந்து கொண்டிருந்தனர்.
பொது மக்கள் தங்களின் குறைபாடுகள் மற்றும்  அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி கௌரவ ஆளுநர் அவர்களிடம் கோரிக்கைகள்  கூறியிருந்தார்கள்.  பொது மக்களின் கோரிக்கைக்கள்  தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு அறிவித்து செயற்படுத்துவதாக ஆளுநர் அவர்கள் பொது மக்களுக்கு தெரிவித்திருந்தார். குறித்த சந்திப்பானது பி.ப 6.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாவகச்சேரி பிரதேசசபை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *