ஆடிப்பிறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும் – 18.07.2024

சாவகச்சேரி பிரதேசசபையின் ஆடிப்பறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும்  18.07.2924ம் திகதியன்று கொடிகாமம்  நட்சத்திரமஹால்  மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு.க.சந்திரகுமார் தலைமையில்  இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தனராக திருமதி. லாகினி நிருபராஷ், பணிப்பாளர் , பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்புவிருந்தினராக  திரு. இராமநாதர் சர்வேஸ்வரன் , உதவி திட்ட பணிப்பாளர், பிரதேசசெயலகம் தென்மராட்சி அவர்களும் கெளரவ விருந்தினர்களாக திரு. திருநாவுக்கரசு அபராஜிதன், அதிபர் – போக்கட்டி அ.த.க.பாடசாலை மற்றும் திரு. கந்தையா மயில்வாகனம், கந்தையா கனகம்மா நிதியம் , நாவற்குழி அவர்களும்  கலந்து சிறப்பித்தனர். மேலும்  சாவகச்சேரி நகரசபை செயலாளர் , உத்தியோகத்தர்கள்,கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ,  மதகுருமார்கள், பாடசாலை மாணவர்கள் , அதிபர்கள், பெற்றோர்கள் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்   யா/ வரணி மத்திய கல்லூரி மாணவர்களின் கத்தாவராயன் கூத்து சிறப்பாக இடம்பெற்றதுடன்  அந் நிகழ்வுகளை ஆற்றுகை்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள்   கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் எமது சபை எல்லைக்குள் உட்படட  சிறந்த எழுத்தாளர்கள் ,  கலைஞர்கள்  மற்றும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட் டனர் .
 எமது சபையின்  வறி ய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவுசெய்யயப்படட  பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி  வைக்கப்படடன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *