ஐங்கரன் முன்பள்ளி மாணவர்களுக்கான காலகோள் விழா 18.02.2025 Clone

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று  முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.  

ஐங்கரன் முன்பள்ளி மாணவர்களுக்கான காலகோள் விழா 18.02.2025

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று  முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.  

Save a life நிறுவனமும் பொது மக்கள் பங்கேற்புடனும் மேற்கொண்ட தூய்மைப்படுத்தும் பணி 30.01.2025

சாவகச்சேரி பிரதேச சபையும், Save a life நிறுவனமும் இணைந்து பொது மக்கள் பங்கேற்புடனும் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினதும் பங்கு பற்றலுடனும் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் சரசாலை குருவிக்காடு பகுதி 30.01.2025 ம் திகதியன்று சுத்தம் செய்யப்பட்டது.
பொதுமக்களால் கொட்டப்பட்ட இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், பீங்கான்கள் என பல கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் தரம் பிரித்து அகற்றப்பட்டது.

நாவற்குழி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 24.12.2024

சாவகச்சேரி பிரதேச சபையின் நாவற்குழி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 24.12.2024 ம் திகதியன்று நாவற்குழி கந்தையா கனகம்மா மண்டபத்தில் எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள், சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Best Annual Report இற்கான விருது வழங்கும் நிகழ்வு 02.12.2024

எமது சபையின் Best Annual Report இற்கான விருது வழங்கும் நிகழ்வு 02.12.2024 ம்  திகதியன்று கொழும்பு சர்வதேஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது . எமது சபையும் Best Annual Report இற்கான விருதினை பெற்று கொண்டது.  

சரசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 05.11.2024

    சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 05.11.2024 ம் திகதியன்று மட்டுவில் கமலாசினி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக Timko International Holdings Pvt Ltd நிறுவனத்தின் Chief Executive Officer வல்லிபுரம் தங்கராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பச்சிலை பள்ளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.தர்சினி தயானந்தன், எமது சபையின் ஓய்வு பெற்ற முன்னாள் செயலாளர் திரு.வேலுப்பிள்ளை சிவராஜாலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கோவிலாக்கண்டி மகா லக்சுமி வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் திரு.கந்தையா தேவநேசன், மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தின் அதிபர் திரு.கிருஷ்ணசாமி சந்திரகுமார் மற்றும் மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் செல்வி நாகராஜா தர்மினி அவர்களும் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் எமது பொது நூலகத்தின் பத்திரிக்கை வாசகர்கள் மற்றும் ஓய்வு நிலை நூலகர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவங்களும் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஈடுபட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.    

சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024

  சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 03.11.2024 ம் திகதியன்று கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது. எமது சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற வைத்தியர் திருமதி. குகதாசன் சுமதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபர் திரு.சி .பாலச்சந்திரன், கச்சாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.ஐ.தேவராயன் மற்றும் சாவகச்சேரி நகராட்சி மன்ற உத்தியோகத்தர் திருமதி. ஜெயந்தினி மகிந்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆர்.எச்.சி.ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.

ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின்  சிறுவர் சந்தை நிகழ்வு  19.07.2024

எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறுவர்களின்  சிறுவர் சந்தை நிகழ்வானது 19.07.2024 ம் திகதியன்று காலை  9.30 மணிக்கு    முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றதுடன்   எமது சபையின் செயலாளர் அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு  ஐங்கரன் சனசமூக நிலைய தலைவர்,  கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர்கள்,  அல்லாரை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள்  மற்றும் சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

ஆடிப்பிறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும் – 18.07.2024

சாவகச்சேரி பிரதேசசபையின் ஆடிப்பறப்பு நிகழ்வும் கலை கலாசார நிகழ்வும்  18.07.2924ம் திகதியன்று கொடிகாமம்  நட்சத்திரமஹால்  மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு.க.சந்திரகுமார் தலைமையில்  இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தனராக திருமதி. லாகினி நிருபராஷ், பணிப்பாளர் , பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்புவிருந்தினராக  திரு. இராமநாதர் சர்வேஸ்வரன் , உதவி திட்ட பணிப்பாளர், பிரதேசசெயலகம் தென்மராட்சி அவர்களும் கெளரவ விருந்தினர்களாக திரு. திருநாவுக்கரசு அபராஜிதன், அதிபர் - போக்கட்டி அ.த.க.பாடசாலை மற்றும் திரு. கந்தையா மயில்வாகனம், கந்தையா கனகம்மா நிதியம் , நாவற்குழி அவர்களும்  கலந்து சிறப்பித்தனர். மேலும்  சாவகச்சேரி நகரசபை செயலாளர் , உத்தியோகத்தர்கள்,கொடிகாமம் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ,  மதகுருமார்கள், பாடசாலை மாணவர்கள் , அதிபர்கள், பெற்றோர்கள் , எமது சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்   யா/ வரணி மத்திய கல்லூரி மாணவர்களின் கத்தாவராயன் கூத்து சிறப்பாக இடம்பெற்றதுடன்  அந் நிகழ்வுகளை ஆற்றுகை்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள்   கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் எமது சபை எல்லைக்குள் உட்படட  சிறந்த எழுத்தாளர்கள் ,  கலைஞர்கள்  மற்றும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட் டனர் .
 எமது சபையின்  வறி ய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவுசெய்யயப்படட  பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி  வைக்கப்படடன.

LDSP திட்டத்தின் கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  கட்டப்பட்ட கடைத்தொகுதி  திறப்பு விழா  வைபவம் 28.06.2024

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலக எல்லைக்குட்பட்ட கைதடி சந்தியில் LDSP திட்டத்தின் கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  கட்டப்பட்ட கடைத்தொகுதி  திறப்பு விழா  வைபவம் சாவகச்சேரி  பிரதேச சபையின் செயலாளர் தலைமையில்  இன்றைய தினம் 28.06.2024 ம் திகதியன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்  அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக
திரு.செ.பிரணவநாதன், செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாணம் மற்றும்  திருமதி தேவநந்தினி பாபு , உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாணம் அவர்களும்  கலந்து சிறப்பித்துள்ளனர் .மேலும் இக்கடை தொகுதியை பொறுப்பேற்று கட் டட வேலைகளை பூர்த்தி செய்த ஒப்பந்தக்காரர்களான  Tecora Construction நிறுவனத்தினர் , சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி,  கடை தொகுதியை பொறுப்பெடுத்தத வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட  திரு. இ.இளங்கோவன், பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்  அவர்கள் கடைதொகுதியை திறந்து வைத்ததர். சாவகச்சேரி பிரதேச சபையின் வறிய மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கடைத்தொகுதியை பெற்றுக்கொண்ட வர்த்தகர்களுக்கு கடைத்தொகுதிக்கான திறப்பு  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.