சாவகச்சேரி பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான 500,000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதி வழங்கல் நிகழ்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 08.04.2024 ம் திகதியன்று முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச சபையின் கச்சாய் உப அலுவலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உலர்உணவு பொதி எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேசசபையின் 2023 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தின நிகழ்வு 2024.03.28 மாலை 2.00 மணிக்கு நட்சத்திர மஹால் திருமண மண்டபத்தில் சாவகச்சேரி பிரதச சபையின் செயலாளர் க.சந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.கி .கமலராஜன், வலயக்கல்வி பணிப்பாளர் தென்மராட்சி அவர்ககளும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் சி.சுதோகுமார், சுகாதார வைத்திய அதிகாரி சாவகச்சேரி மற்றும் திரு.ப.பார்த்தீபன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வட மாகாணம் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ஆ.தங்கவேலு, அதிபர் - வரணி மத்திய கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது உள்ளூராட்சி தினத்தை முன்னிட்டுநடைபெற்ற சனசமூக நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பங்கு வெற்றி ஈட்டிய சனசமூக நிலையங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளில் வளவாளராக செயற்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வரியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையும் கைதடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடாத்திய 2024ம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு 26.03.2024 ம் திகதியன்று கைதடி அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் பி.ப 2.00 அளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.சுதாகர் கனிஸ்ரா, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி தயாசக்தி பாலசுப்ரமணியம், அதிபர் சாவகச்சேரி மகளிர் கல்லூரி., மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியர் ஜெயதர்சினி சத்துருக்கன் , ஆயுர்வேத வைத்தியர் சாவகச்சேரி பிரதேசசபை, மற்றும் இ.கந்தசாமி, தலைவர் சன சமூக நிலையங்களின் ஒன்றியம், கைதடி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இவ் நிகழ்வின் பொது சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சாவகச்சேரி பிரதேசசபை உட்பட்ட வடக்கு மாகாணத்தின் 34 உள்ளூராட்சி மன்றங்களின் இணையத்தளங்கள் 01.03.2024ம் திகதி காலை 10.00 மணிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்
திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
https://chavakachcheri.ps.gov.lk எனும் இணைப்பில் சாவகச்சேரி பிரதேச சபை இணையத்தளத்தை பார்வையிடலாம். இவ் இணைய தளத்தின் ஊடாக எமது சபை தொடர்பான தகவல்கள், வரவுசெலவு திட்ட அறிக்கைகள் , அறிவித்தல்கள், உப அலுவலகங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்ளை பெற்று கொள்ளலாம்.
இவ் இணையத் தளத்தை சிறப்புற வடிவமைத்த எமது சபையின் அபிவிருத்தி அலுவலர்கள் பிரதம செயலாளரால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இவ் இணையத்தள உருவாகத்திற்கு அனுசரனை வழங்கிய CDLG திட்ட குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.